சனி, 30 ஏப்ரல், 2011

லசாரஸ் சிண்ட்ரோம்

ஒன்று விட்ட பாட்டியோ தாத்தாவோ இறந்து விட்டார்.
ஒப்பாரியெல்லாம் முடிந்து பாடை கட்டும் நேரத்தில் அவர் எழுந்து உட்கார்ந்து "ஒரு காபி  கொடுப்பா!" என்று கேட்டால் எப்படி இருக்கும்?

இப்படி மீண்டும் உயிர்த்தெழுவதை தான் 'லசாரஸ் சிண்ட்ரோம்' என்கிறார்கள்.


பெயர்க்காரணம்:

லசாரஸ் என்பவர் பைபிளின் படி, இறந்த நான்கு நாட்களுக்கு பின்  ஏசுவின் உதவியால் உயிர்த்தெழுந்தவர். அதனால் இது லசாரஸ் சிண்ட்ரோம்.

2009 ஆம் ஆண்டு வரை உலகில்  மொத்தம் 39 பேர் இது போல இறந்த பின் உயிர்த்தெழுந்திருப்பதாக தகவல்.

இப்படி எழுந்தவர்களில் சிலர்  செத்துப் பிழைத்ததன் அடையாளமே இன்றி நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள்.

பொதுவாய், இறந்தவர்களை மருத்துவர்கள் இதய இயக்கமீட்பின் (CPR) மூலம் உயிர்பிக்க  முயற்சிக்கிறார்கள்.  அப்படியும் உயிர் பிரிந்தால் பத்து நிமிடம் வரை கண்காணிப்பில் வைத்திருந்து விட்டு, உறவினர்களுக்கு தெரிவிக்கிறார்கள்.

சென்ற ஏப்ரல் மாதம் பினாங்கில் 65வயது ஆடவர் ஒருவர், இறந்து விட்டதாய் அறிவிக்கப் பட்ட  இரண்டரை மணி நேரம் கழித்து இப்படி     சாவகாசமாய்  உயித்தெழுந்திருக்கிறார்.

லசாரஸ் சிண்ட்ரோமிற்கான  சரியான காரணத்தை மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதய இயக்கமீட்பு முயற்சிக்குப்  பிறகு உருவாகும் வாயுக்களால் இதயம் மீண்டும் துடித்திருக்கலாம்   என்று கூறுகிறார்கள்.

மண்ணில் புதைக்கப் பட்ட பிறகு எத்தனைப் பேர் இப்படி எழ முயற்சித்தார்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம்.