செவ்வாய், 26 ஏப்ரல், 2011

ஆவி உலகம் - 1

எனக்கு கொஞ்சம் நாட்களாக ஆவிகளைப் பற்றி அறியும் ஆவல் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அபசகுணமாய் இருந்தாலும், அவற்றிலிருந்தே ஆரம்பிக்கிறேன். இந்த விஷயங்கள் எல்லாம் நான் படித்து தெரிந்துக் கொண்டவையே. உண்மை என்பதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.

சரி முதலில்ஆவியுலகம் பற்றி ஒரு சிறிய முன்னுரை.

ஆவி என்பது நம் உடலிலிருக்கும் ஆத்மாவேயாகும் (சூட்சம உடல்). இது நம் உடலை விட்டு  பிரியும் போது இறந்ததாக கருதப்படுகிறோம்.

மொத்தத்தில் ஆவியுலகம் புண்ணிய லோகம், மத்திய லோகம், பாவ லோகம் என மூன்று பிரிவுகளாய் இயங்குகிறது.

நல்ல காரியங்களைச் செய்தவர்களின் ஆவி நேராக புண்ணியலோகம் செல்கிறது. பொதுவாய் இங்கே செல்பவர்களுக்கு மறுபிறவி இல்லை.

மத்திய லோகத்தில் இருக்கும் ஆவிகள் சில காலம் கழித்து புண்ணியலோகம் செல்லும் தகுதியைப் பெறுகின்றன.

தெரிந்தே பாவச் செயல்களைச் செய்பவர்கள் பாவலோகம் செல்கிறார்கள்.

அப்போது பேய் என்பது என்ன?

 மனிதன் தனக்கு இயற்கையான மரணம் நிகழும் முன், விபத்து அல்லது தற்கொலையின் மூலமாக  துர்மரணத்தைத் தேடிக் கொள்ளும் போது பேயாக மாறுகிறான். குறிப்பிட்ட சில காலங்கள் வரை அந்த இடத்தையே சுற்றி வருகிறான்.

ஆவிகளை  மனிதர்கள் 'மீடியம்' களின் மூலம் தொடர்பு கொள்கிறார்கள்.

இவற்றைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கு செத்துப் பிழைத்தவர்களையெல்லாம் பேட்டி கண்டு அவர்களின் அனுபவத்தை சேகரிக்கின்றனர் ஆராய்ச்சியாளார்கள். அவர்கள்( செ. பிழைத்தவர்கள்)  சொல்வது பெரும்பாலும் ஒன்றையொன்று ஒத்தே இருக்கின்றன.

பொதுவாய் அனைவரும் உடலிலிருந்து விடுபட்டதும், இருண்ட ஒரு சுரங்கப் பாதையில் வேகமாக செல்கின்றனர்.  தூரத்தில் ஒரு பேரொளியைக் காண்கின்றனர். அந்த ஒளியையே கடவுள் என்று கூறுகின்றனர். அதனிடம் அன்பும் கருணையும் நிறைந்திருப்பதாகவும், அங்கேயே தங்கிவிட வேண்டும் என்ற ஆசை ஏற்படுவதாகவும்  சொல்கின்றனர்.

அங்கே இவர்களின் வாழ்க்கை ஒரு திரைப்படம் போல இவர்களின் கண்முன்னே தோன்றுகிறதாம். இவர்கள்  துன்புறுத்திய போது மற்றவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை,  இவர்களால் உணரமுடிகிறதாம்.

பிறகு அந்த கடவுள், தன் ஆயுட்காலம் முடிவு பெறாததால் பூமிக்கு திரும்பும் படி கட்டளையிட்டதாகவும், அதன் பின்னே மனமின்றி திரும்பி தன் உடலுக்கு வந்ததாகவும் கூறுகின்றனர். 

இந்த அனுபவத்திற்கு பிறகு வாழ்கையைப் பற்றிய மனோபாவமே மாறி விட்டதாகவும், இறப்பை பற்றிய பயம் அவர்களுக்கு நீங்கிவிட்டதாகவும் தெரிகிறது.

தொடரும் .  .  .

3 கருத்துகள்:

Lakshmi சொன்னது…

நானும் இதுபற்றி புஸ்தகங்களில் படித்ததுண்டு. இப்ப
நம்ம வாழ்க்கையே எடுத்துக்கொண்டால் ஒருவயசுவரை என்ன நடந்தது என்றே நமக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. இதில் போன ஜன்மமவாவது, இந்த ஜன்மமவது?இப்ப சாப்பீட்டா இப்பவே வயறு நிறம்பனும். இன்னிக்கு சாப்பிடு நாளைக்குவயறு நிறம்பும் என்ரால் எப்படி? இதெல்லாம்
நம்புவதும் நம்பாததும் அவரவர் மன நிலை பொறுத்தது.

riviya சொன்னது…

உண்மை தாங்க! அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தே இவ்விஷயங்கள் உண்மையாகவோ பொய்யாகவோ மாறுகின்றன!

Partha சொன்னது…

இது தொடர்பாக சில புத்தகங்களை படித்தால் மேலும் தெளிவு பெறலாம்!
1)இறப்பிற்கும் பிறப்பிற்கும் நடுவில் - ராமனந்த குரு (Ujiladevi.blogspot.com)
2) மறைமலை அடிகளார் எழுதிய புத்தகம் (பெயர் நினைவில்லை)
3) ”ஒரு யோகியின் சுயசரிதம்” -
யோகானந்தாவின் குரு யுக்தேஸ்வரரின் சாட்சி.
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய புத்தகம் இது!
4) சில சமயம் இறக்கும் தருவாயில் உள்ளவர்களின் கண்ணிற்கு மட்டும் சில உருவங்கள் தோன்றும், அவை இந்த ஆத்மாவை அழைத்து செல்ல வந்துள்ள தூதர்கள் ஆகும்.