திங்கள், 16 மே, 2011

பர்முடா முக்கோணம் -1

                                 
யுனைடட் ஸ்டேட்ஸின் கிழக்குப் பகுதியில், ஃப்ளோரிடா, பர்முடா மற்றும் ப்வொர்தோ ரிகோ ஆகியவற்றின் இடையே  அமைந்திருக்கிறது, அதிபயங்கரமான பயண அனுபவங்களை தரக் கூடிய இந்தப் பகுதி.

பொதுவாய் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதி தான் இது. இருந்தும் இதன் வழியே பயணம் செய்த சில கலங்கள் தடயம் எதுவுமின்றி காணாமல் போயிருக்கின்றன.


இதுவரை  நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்களையும், விமானங்களையும் அதனுள் இருந்த மக்களுடன் சேர்ந்து  ஏப்பம் விட்டிருக்கிறது இது. திறமையான விமானிகளும் கப்பலோட்டிகளும் கூட மறைந்தவர்களுள் அடக்கம்.


சரி, அந்த கலங்கள் தொலைவதற்கு முன் என்ன நடந்தது?

காணாமல் போன   விமானங்களுடனான தரைத்தொடர்பு  துண்டிக்கப்பட்டு,  ரேடாரிலிருந்து அவர்களுடைய இருப்பு காணாமல் போகியிருக்கிறது.


 'நாங்கள் எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை! தொலைந்துவிட்டோம் என்று நினைக்கிறோம்'

'நாங்கள் ஏதோ ஒரு நிலபரப்பின் மேலே பறந்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறது. எங்களால் கீழே நிலத்தைப் பார்க்க முடியவில்லை!'

'நிலம் துண்டு துண்டாய் தான் கண்களுக்குத் தெரிகிறது'

போன்ற விமானிகளின் கடைசி வார்த்தைகளுடன் அவை நிலத் தொடர்பிலிருந்தும், ரேடாரிலிருந்தும் தொலைந்து போயிருக்கின்றன.


                                            
கிரிஸ்டோபர் கொலம்பஸ்   1492ஆம் ஆண்டு இந்த முக்கோணத்தைக் பல அதிசய அனுபவங்களுடன் கடந்திருக்கிறார். அவருடைய கப்பலின் மேக்னடிக் காம்பஸ் முதலில் செயலிழந்து போயிருக்கிறது.  காற்று ஏதுமில்லாமலேயே கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.   மேலேயும் கீழேயும்
அலைந்துக் கொண்டிருந்த வெளிச்சப் புள்ளிகள் தெரிந்திருக்கின்றன.

இன்றுவரை காணாமல் போன கலங்களைப்  பற்றிய தெளிவான  தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.


இது வேற்றுகிரகவாசிகளின் செயலே என்கிறார்கள்.

சிலர் கடலுள் மூழ்கியதாக நம்பப்படும் அட்லான்டிஸ் கண்டத்திற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறது என்கிறார்கள். 

இல்லையில்லை அந்த இடத்தின் பூகோள அமைப்பு அப்படி. அங்கே இருக்கும் காந்தசக்தி காம்பஸ்களை செயலிழக்க வைக்கிறது என்கிறார்கள் வேறு சிலர்.


இந்த மாதிரி சூழல்களிலிருந்து  தப்பி வந்தவர்களும் இருக்கிறார்கள்.


சரி என்ன தான் நடக்கிறது இங்கே!  . . .