திங்கள், 2 மே, 2011

ஆவி உலகம் - 2

ஆவி உலகம் - 1

தங்கள் உடலை விட்டு ஆவி பிரிந்த போது, சுற்றிலும் நடந்தவற்றைப் பார்த்ததாக சொல்கிறார்கள் செத்துப் பிழைத்தவர்கள். 

மருத்துவர்களும், தாதிகளும் தம்மை பிழைக்க வைக்கப் போராடியதை அப்படியே விவரிக்கிறார்கள்.  அந்த கூற்று உண்மை என்று மருத்துவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்களாம்.

ஆவியுலகிற்கு செல்லும் வழியில் இவர்களுடன் ஒரு தேவதை துணைக்கு வருகிறது.

இருளடைந்த சுரங்கப் பாதையைக் கடந்ததும்,  இறந்து போன தமது உறவினர்களை பார்த்ததாகவும், அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதை உணர்ந்ததாகவும் கூறுகின்றனர்.

பொதுவாய் யாரும் அங்கே வாய் திறந்து பேசுவதில்லை. தான் நினைப்பதை எதிராளிகளுக்கு எண்ணங்களின் மூலம் உணர்த்துகிறார்கள்.

உறவினர்கள் சில சமயம் குறைந்த வயதில் தோற்றமளிக்கிறார்கள்.  நோயினால் இறந்தவர்கள்  கூட  திடமாய்  காட்சியளிக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது பயம் ஏற்படுவதில்லை மாறாக பாசமே ஏற்படுகிறது.


விஞ்ஞானிகள் இத்தகைய கூற்றுகளை சுத்தமாய் மறுக்கிறார்கள்.

இவை ஹாலூசினேஷனாக இருக்கும் என்கிறார்கள்.


1.கருவறை வெளிச்சமின்றி இருப்பதால் அது பிறக்கப் போகும் குழந்தையின் நினைவு செல்களில் ஒரு இருண்ட இடமாக பதிந்து போயிருக்கூடும் என்றும்

2.கர்பப்பையின் வாய் குறுகியது என்பதால் அது சுரங்கப் பாதையாக தோன்றியிருக்கக் கூடும் என்றும்

3.இருண்ட கர்ப்பப்பை வாயிலின் வழியாக குழந்தை வெளியே வந்து சேரும்போது, இவ்வுலகின்  வெளிச்சமே  அந்த பேரொளியாக அதன் நினைவு அடுக்குகளில் பதிந்து போயிருக்கக் கூடும் என்றும்  அவர்கள் காரணங்களை அடுக்குகிறார்கள்.


 பிறக்கும் குழந்தைக்கு மூளை வளர்ச்சி என்பது சுத்தமாய் கிடையாது. அதனால் இவர்கள் கூறும் காரணங்கள் அர்த்தமற்றவை என்று எதிர் வாதம் செய்கிறாரகள் ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள்.

இவர்கள் இப்படியே மாறி மாறி பேசிக்கொண்டிருந்தாலும், ஆவிகளுடன் பேசுபவர்கள் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

ஆவிகளுடன் பேசுவதற்கு உதவுபவர்களை மீடியம் என்கிறார்கள். 'மீடியம்'களுக்கு ஒரு வழிகாட்டும் ஆவியின் உதவி தேவைப் படுகிறது. இவற்றின் அனுமதியைப் பெற்றே அவர்கள் விரும்பும் ஆவிகளை அழைத்துப் பேசுகிறார்கள்.

இடையிடையே அழைக்காமல் வந்து போகும் குறும்புக்கார ஆவிகளும் உண்டு. அவற்றிடமிருந்து வழிகாட்டும் ஆவிகள் காப்பதாக நம்புகிறார்கள் இவர்கள்.

ஆவிகளுடன் பேசுவதற்கு பிரசித்தி பெற்ற ஒரு முறை ஒய்ஜா போர்டு முறை.இந்தப் பலகையின் மேல் ஒரு டம்ளரைக் கவிழ்த்து விட்டு மீடியமாக இருப்பவரும் மற்றொருவரும் அதன் மேல் கைவிரல்களை லேசாக வைக்கிறார்கள். 
ஆவிகளை முறையாய் வரவேற்று, வணங்கிவிட்டு பிறகு   கேள்விகளைக் கேட்கிறார்கள். 
ஆவிகளும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனவாம்.

முயற்சி செய்து பார்க்க தான் தயக்கமாய் இருக்கிறது.

-முற்றும்.

கருத்துகள் இல்லை: