செவ்வாய், 28 ஜூன், 2011

தானாகவே எரியும் மனிதர்கள் (Spontaneous Human Combustion)- 1

1980ல் ஹென்ரி தாமஸ் என்ற எழுபத்து மூன்று வயது மனிதர், சவுத் வேல்ஸிலிருந்த தன் வீட்டின் கூடத்தில் சாம்பல் குவியலாக கண்டெடுக்கப்பட்டார். உருப்படியாக மண்டை ஓடும் மூட்டுக்குக் கீழே இருந்த கால் பகுதிகளும் மட்டுமே கிடைத்தன. உடலின் மற்ற பாகங்கள் எல்லாம் பஸ்பமாகியிருந்தன.
அவர் அமர்ந்திருந்த நாற்காலியில் பாதி எரிந்து போயிருந்தது. அவரது அஸ்தி கிடந்த இடத்திலிருந்த கார்பெட் மட்டுமே எரிந்து போயிருந்தது.  மற்றபடி அவர் காலிலிருந்த சாக்ஸ் உட்பட எந்த பொருளுக்கும் சேதம் ஏற்படவில்லை.
அவருடைய செருப்பும் கண்ணாடியும் அருகே கிடந்தன. சுற்றுபுறத்தில் போராட்டம் நடந்ததற்கான தடயம் எதுவும் இல்லை.
விபத்து நடந்த இடத்தில் சுண்டிய திரவத் திட்டுகள் காணப்பட்டன. அவற்றை ஆய்வு செய்ததில் அது மனித கொழுப்பு என்று தெரிய வந்தது.
இந்த வழக்கை ஆய்வு செய்த காவலர் திரு. ஜான் ஹெய்மர் மண்டையைப் பிய்த்துக் கொண்டார். பொதுவாய் நம் உடல் எரிய எழுநூறு டிகிரி முதல் ஆயிரம் டிகிரி வரையான வெப்பம் தேவைப்படுகிறது. ஹென்ரி தாமஸ் இருந்த கூடத்தில் அப்பேற்பட்ட நெருப்பை உண்டாக்கக் கூடிய பொருள் எதுவுமே இல்லை.
நெருப்பு வெளியிலிருந்து வந்து பற்றிக் கொள்ள எந்த சாத்தியக் கூறும் இல்லை என்று உறுதியுடன் கூறினார் ஹெய்மர். பின் விசாரித்ததில் இதே போல கிட்டத்தட்ட முன்நூறு மரணங்கள் நிகழ்ந்திருப்பதாய் தெரிய வந்தது.
வசதியாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது தான் ஹென்ரி தாமஸீக்கு இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. எரியாத காலிலிருந்து எடுத்த ரத்தத்தை சோதித்ததில், எரியத் தொடங்கும் போது அவர் உயிருடன்  இருந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
தன் உடல் எரிந்த போது ஏற்பட்ட புகையை சுவாசித்து, மூச்சு முட்டி இறந்து போனதாய் கேசை முடித்தார்கள்.
இதே போல் 1951ல் மேரி ரீஸரும், 1966ல் டாக்டர் ஜான் இர்விங் பென்ட்லேவும், 1986ல் ஜார்ஜ் மோட்டும், அருகிலிருந்த பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் எரிந்து போனார்கள்.
இப்படி எக்காரணமும் இன்றி தானாகவே மனித உடல் பற்றிக் கொண்டு எரிந்து போவதை Spontaneous Human Combustion  என்கிறார்கள் விஞ்ஞானிகள். உடல் இப்படி தானே எரியக் காரணம் . . .