திங்கள், 29 ஆகஸ்ட், 2011

தேஜாவூ (Déjà vu)


நீங்கள் மாடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள். தலைக்கு மேலே ஒரு காகம் கரைந்தபடி பறந்து போகிறது. யார் வீட்டிலிருந்தோ தோசை சுடும் வாசம் வருகிறது. கீழே ஒருவர் பெரிய சுத்தியலால் இரும்பை அடித்துக் கொண்டிருக்கிறார். சாலையை ஒரு பெண் கடந்துக் கொண்டிருக்கிறாள். 

இதே சூழலை வேறு எங்கோ, எப்போதோ பார்த்தது போல ஒரு கணம் தோன்றுகிறது, ஏதோ முன் ஜென்மத்து ஞாபகம் போல.
என்ன என்று புரியாமல் விசித்திரமாக இருக்கிறது. யோசித்து பார்த்தால் இந்த இடத்தில் இதற்கு முன்பு இப்படி நிற்கக் கூடிய சாத்தியமே இருக்காது. உண்மையிலேயே முன் ஜென்மமோ என்று கூட தோன்றும்.

ஆனால் இது அதெல்லாம் இல்லை, இதன் பெயர் தேஜாவூ என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அதாவது தற்போதைய சூழ்நிலையை முன்பே அனுபவித்தது போன்ற எண்ணம் ஏற்படுவதைத் தான் தேஜாவூ என்கிறார்கள் அவர்கள். நூற்றில் எழுபது பேருக்கு இது போல நடந்திருக்கிறதாம்.

தேஜாவூ, முன்பே பரிச்சயமான அதே சமயம் பரிச்சயமற்ற தன்மையை கொடுக்கிறது அல்லது 
மனதை சங்கடபடுத்தக் கூடிய ஒரு பரிச்சயத் தன்மையை ஏற்படுத்துகிறது. 

சிலருக்கு இது கண்டிப்பாய் முன்பு நடந்திருக்கிறது என்ற எண்ணத்தை வலுவாய் ஏற்படுத்தியிருக்கிறது.  

இந்த நிகழ்ச்சி கனவில் முன்பே தோன்றியிருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். இல்லையில்லை இது முன் ஜென்ம கேஸ் தான் என்கிறார்கள் வேறுசிலர்.  இதை E.S.P என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். 

விஞ்ஞானிகள் இதையெல்லாம் மறுக்கிறார்கள். இது மூளைக்குள் ஏற்படும் ஒரு சிறு பாதை மாற்றம் என்கிறார்கள் அவர்கள். 

இதற்கு சாட்சியாக அவர்கள் கூறுவது-
இது முன்பே நிகழ்ந்திருக்கிறது என்று சொல்பவர்களால் அது எங்கே, எப்போது, எப்படி நடந்தது என்பதை சரியாய் சொல்ல முடிந்ததில்லை. அதே போல சில வருடங்களுக்குப் பின் அவர்களால் இந்த தேஜாவூவை நினைவுக்கு கொண்டு வர முடிகிறதே தவிர நடந்ததாக நினைக்கும் நிஜ நிகழ்வை கொண்டு வர முடிந்ததில்லை
- இதைத்தான்

இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் இன்னும் நடந்துக் கொண்டிருக்கின்றன!