வியாழன், 8 டிசம்பர், 2011

Automatic Writing ( கண்டிப்பாய் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும்)


Automatic Writing என்பது எழுதுபவர் தன்னினைவு இல்லாமல் எழுதும் ஒரு நிகழ்வை குறிக்கிறது.
இந்த அமானுஷ்ய நிகழ்விற்கு sub- conscious mind துணைபுரிவதாகச் சொல்கிறார்கள்.

கவிஞர் W. B. Yeats ன் மனைவி Georgie Hyde-Lees, Automatic Writing மூலம் எழுதியிருக்கிறார். எழுதுவதற்கு ஆவிகள் தயாராயிருப்பதை, இவருக்கு  வீட்டினுள் கமழும் புதினா இலையின் மணம் தெரிவிக்குமாம்.

Yeatsம் அவரது மனைவியும்  சேர்ந்து இந்த முறையை பரிசோதனை செய்து எழுதிய      ‘A Vision’ என்ற புத்தகம் 1925ல் வெளியிடப்பட்டது. இந்த புத்தகம் Yeats ன் படைப்புகளிலேயே உன்னதமானதாக கருதப்படுகிறது.

1975ல் Wendy Hart என்பவர் 1642வில் இறந்த நிக்கோலஸ் என்பவரைப் பற்றிய குறிப்புகளை இந்த முறையில் எழுதியிருக்கிறார்.

'Automatic Writing'- கை R.K. Narayanan, ‘The English Teacher’ என்ற தன் நாவலில் ஒரு நிகழ்வாக கொடுத்திருக்கிறார்.

Automatic Writing கின் போது ஆவிகள் துணை புரிவதாகவும், எழுதுபவரின் கையை ஆவிகள் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதாகவும் சொல்கிறார்கள்.

Automatic Writing-கை முயற்சிப்பதற்கு கீழ்கண்ட வழிகளை பின்பற்ற சொல்கிறது இணையம்.

1. ஒரு அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து, ஒரு பேனாவையும் பேப்பரையும் கையில் வைத்துக் கொண்டு வசதியாய் உட்கார்ந்துக் கொள்ளவேண்டும்.

2. பேப்பரின் மேல் பேனாவை வைத்தபடி கண்களை மூடிக் கொள்ளவேண்டும். மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ளவேண்டும்.

3. சற்று நேரம் காத்திருக்கலாம். பின் கை எதை எழுதுகிறதோ அதை அனுமதிக்க வேண்டும். எதையும் சுயநினைவுடன் எழுதக் கூடாது. இதற்கு சற்று அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாம்.

4. எழுதி முடிந்துவிட்டது என்று தோன்றும் போது பேப்பரைப் பார்க்கலாம். அதில் இருக்கும் எழுத்துகள், எண்கள், படங்கள் இவற்றை வைத்து (ஆவிகள்) சொல்ல வரும் விஷயத்தை அறிந்துக் கொள்ளலாம். முயற்சி பலித்துவிட்டால் நாம் கேள்விகள் கேட்கத் தொடங்கலாம்.

ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்தாலும் பின்னாட்களில் எழுத்து கைவரக் கூடிய சாத்தியம் உண்டு.

கண்டிப்பாக கைவரும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. அதே போல இதில் ஆவிகள் தொல்லை தரும் வாய்ப்புகள் இருப்பதால் தைரியமானவர்கள் மட்டுமே முயற்சிக்கவும்.

3 கருத்துகள்:

Rathnavel சொன்னது…

நல்ல பதிவு.

கே.ஜே.அசோக்குமார் சொன்னது…

வம்சி போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!

rishvan சொன்னது…

... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகி அழகான ஆழமான வரிகள்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...www.rishvan.com