வெள்ளி, 23 மார்ச், 2012

உங்களுக்கு இது ஏற்பட்டிருக்கிறதா? (ASMR)


நீங்கள் ஒரு அமைதியான இடத்தில் உட்கார்ந்திருக்கிறீர்கள். அருகிலிருப்பவர் பேப்பரில் பென்சிலால் எழுதிக் கொண்டிருக்கிறார். பேப்பரோடு பென்சில் உராயும் சத்தம் தெளிவாய் கேட்கிறது.


திடீரென்று உங்கள் தலைக்குள் ஒருவித Tingling Sensation ஏற்பட்டு உடல் சிலிர்த்திருக்கிறதா? என்னவென்று புரியாத உணர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா? நீங்கள் ASMR  experienceசைப் பெற்றவர்களில் ஒருவர்.

(இதுவரை ஏற்பட்டதில்லை என்றால் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பார்த்துவிட்டு அது ஏற்படுகிறதா என்று சொல்லுங்கள்)இப்படி தலைக்குள் ஏற்படும் மயிர்கூச்செரியும் உணர்விற்கு (Tingling Sensation in head)  ASMR (Autonomous Sensory Meridian Response) என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
இந்த உணர்ச்சி பொதுவாய் உச்சந்தலையில் தலையில் துவங்கி முதுகுத் தண்டு வழியாக கீழே நகர்கிறது. உடல் சிலிர்த்துப் போகிறது.
இது மூளைக்குள் ஒரு pleasurable experienceசை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் மூளை மசாஜ் செய்த புத்துணர்ச்சியைப் பெறுகிறது.


சிலர் இதை சிறுவயது முதற்கொண்டே உணர்ந்து வந்திருக்கிறார்கள். ஆனாலும் வெளியில் சொல்லமுடியாத உணர்ச்சியாகவே இது இருந்து வருகிறது.
ASMRரை அனுபவிக்காத ஒருவரால் அதைப் பற்றி புரிந்துக் கொள்ள முடிவதில்லை. அவர் இதை ஒரு நோய் என்றே நினைத்துக் கொள்கிறார்.


ASMRல் இதில் இரண்டு வகைகள் உள்ளன.


 Type A

இந்த வகை ASMR  மனதிற்கு கட்டுப்பட்டவை.
இதை உணர வெளிப்புற காரணிகள் எதுவும் தேவையில்லை.
ஒருவர் தன் எண்ண ஓட்டத்தை குறிப்பிட்ட வகையில் ஒழுங்கு படுத்துவதன் மூலம் இதை உணரமுடியும்.
எந்த வகை எண்ணத்தின் மூலம் இதை உணரமுடிகிறது என்பது ஆளுக்கேற்ப வேறுபடும்.

இந்த உணச்சியை ஆன்மீக உணர்வோடு சம்பத்தப்படுத்துகிறார்கள். தியானத்தினால் ஏற்படும் ஒரு உச்ச நிலையாகவும் சொல்கிறார்கள். சக்கரங்களைத் தட்டி எழுப்புவதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

Type B

ASMRரை  வெளிப்புற காரணிகளால் தூண்ட முடிந்தால் அவை Type Bயில் சேரும்.

கீழ்வருபவற்றில் ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்டவையோ உங்களுக்குள் ASMR ரைத் தூண்டலாம்.


·         முடிவிட்டும் போது கத்திரிக்கோல் ஏற்படுத்தும் சத்தம்


·         கிசுகிசுப்பான தொனியைக் கொண்ட பேச்சு


·         மனதிற்கு மிகவும் பிடித்த பாடல்


·         செய்தித் தாளைத் திருப்பும் போது ஏற்படும் சத்தம்


·         நகம் வெட்டும் போது ஏற்படும் ஓசை


·         சூயிங் கம்மை மெல்லும் ஓசை


·         யாரவது முதுகில் லேசாக தொடுவது


இப்படி நிறைய காரணிகள் உள்ளன.


you tubeல்  இதற்கென்றே பிரத்தியோகமாக வீடியோக்கள் கிடைக்கின்றன.

கீழே கொடுக்கப்பட்ட வீடியோவை அமைதியான சூழலியில் கண்களை மூடிக் கொண்டு (முடிந்தால் ஹெட் போனில் )கேளுங்கள்.  உங்களுக்குள் ASMR  ஏற்படுகிறதா?


எத்தனை பேருக்கு ஏற்படுகிறது என்று தெரிந்துக் கொள்ள ஆவல். முடிந்தால் சொல்லவும்.

ASMRருக் கென்று இப்போது வலைப்பக்கங்கள் இருக்கின்றன. Facebookல் இதற்கென்று ஒரு Groupம் கூட இருக்கிறது.