வெள்ளி, 16 அக்டோபர், 2015

பெயர்


பாக் பக் பக்காக இருக்கலாம்

கொத்துவானாக இருக்கலாம், இல்லை

நாயாகவோ மாரியாத்தாளாகவோ

கூட இருக்கலாம்

சேவலின் பெயர்

கோழியின் பாஷையில்

 

பேசிக் கொண்டே இருக்கும்

‘சள சளா’வாக இருக்கலாம்

ப்ரசவித்த வெம்மை  தீருமுன்

அதன் முட்டையைத் திருடும்

திருடனாக இருக்கலாம்,

அல்லது

கூண்டிலடைக்கப் பட்ட

சுற்றத்தின் முன் அதை

சுடுநீரில் முக்கி சிறகுரித்து

பலவிதமாய் சமைத்துண்டு

திருப்தியாய் ஏப்பம் விடும்

அரக்கனாய் இருக்கலாம்

என் பெயரின் அர்த்தம்

கோழியின் பாஷையில்

 

 

2 கருத்துகள்:

ஜீவி சொன்னது…

முதல் பாரா சேவலின் பெயர் கோழியின் பாஷையிலா?.. ஓ.கே. ஒண்டர்புல்.

இரண்டாவது அற்புதம-- கோழியின் பாஷையில் நீங்கள். சரியா?..

யாருக்கும் தோன்றாத புதுமையான கற்பனை. ரசித்தேன்.

Truth சொன்னது…

Unique and nice