சனி, 27 பிப்ரவரி, 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் -3

ஹிப்னாடிஸம் எப்படி வேலை செய்கிறது?
நம் மனதை மூன்று அடுக்குகளைக் கொண்ட வட்டங்களாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.

 Image result for superconscious mind circle
(முதல் அடுக்கு – Conscious Mind
இரண்டாம் அடுக்கு- Subconscious mind
மூன்றாம் அடுக்கு- Superconscious mind or Soul)

அனைத்திற்கும் வெளியே இருக்கும் வட்டம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சாதாரண மனதைக் ( conscious mind) குறிக்கிறது. இது இருப்பது Beta stateல்

அதற்குள் இருக்கும் இரண்டாம் வட்டம் நம் subconscious mind. இது இருப்பது alpha stateடில்.
இதில் தான் நம்முடைய இப்பிறவி நினைவுகளும் முற்பிறவி நினைவுகளும் புதைந்திருக்கின்றன.
நம்மை மிகவும் பாதித்த நிகழ்வுகள், பயங்கள் ஆகியனவும் இங்கே தான் பதிந்திருக்கின்றன.
 நமக்கு கனவுகள் வருவது இங்கு புதைந்திருக்கும் நினைவுகள், உணர்வுகள் மேலெழும்பி வருவதால் தான் என்று சொல்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சில சமயம் கனவுகளில் நாம், நம் காலத்திற்குச் சம்பந்தமில்லாத உடைகளுடன், மனிதர்களுடன், நமக்கு பரிட்சயமில்லாத ‘பழைய’ இடங்களில்  தோன்றக்கூடும்.
அவை நம் முற்பிறவி நினைவுகளாய் இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

நம் மனதை alpha stateக்குக் கொண்டு செல்வதன் மூலம் இந்த Sub conscious mindஐ நம்மால் அணுக முடியும்.
பொதுவாய் தியானத்தின் மூலம் நம்மால் மனதை இந்நிலைக்குச் கொண்டு செல்ல முடியும்.
கற்பனை சக்தியைப் பயன்படுத்தும் எழுத்தாளர்கள், ஓவியர்கள் போன்றவர்கள் alpha stateல் இருந்துக் கொண்டு எழுதும் கதைகளோ, ஓவியங்களோ சிறந்தவையாக இருக்கின்றன.

இந்த இரு வட்டங்களுக்கு உள்ளே இருக்கும் மூன்றாவது வட்டம் தான் Super conscious mind. இது இருப்பது Theta stateல்.
இதை நம்முடைய soul என்றும் சொல்லலாம்.
நாம் யார் என்ற உண்மையான அடையாளம் இங்கே தான் இருக்கிறது. இதில் இரு பிறப்புகளுக்கு நடுவே நடந்த நிகழ்வுகளின் நினைவுகள் புதைந்திருக்கின்றன.
மனதை Theta stateக்குக் கொண்டு செல்வதன் மூலம் இந்த நினைவுகளை ஒருவரால் அணுக முடியும்.

மனிதர்கள் ஹிப்னாடிஸத்திற்கு உட்படுத்தி அவர்களின் மனதை beta stateடிலிருந்து,  Alpha stateக்கும் Theta stateக்கும் கொண்டு செல்ல முடியும்.
இதன் மூலம் அவர்களது subconscious மற்றும் super conscious mind களை விழிப்படைய வைக்க முடியும்.

இந்த கட்டுரையில் நான் சொல்லும் குறிப்புகள் எல்லாம் மனிதர்களை, இம்முறையில் முற்பிறவிகளுக்கு அழைத்துச் சென்று, அந்த பிறவியின் இறப்பை நினைவுபடுத்தி, அங்கே அவர்கள் கண்டதை வைத்து எழுதப்பட்டது.

அதே போல இங்கு எழுதப்படும் அனைத்து அனுபவங்களும் ஒருவருக்கே ஏற்பட்டது அல்ல.
Michael Newton என்ற ஆராய்ச்சியாளர் பலரை இது போல ஹிப்னாடிஸத்திற்கு ஆட்படுத்தினார்.
அப்போது ஒவ்வொருவராலும்,  சில நிகழ்வுகளை மட்டுமே தெளிவாய் நினைவில் கொண்டு வரமுடிந்தது. அதையெல்லாம் தொகுத்து, வரிசையாய் அடுக்கி எழுதப்பட்டது தான் Journey of the souls என்ற அவரது புத்தகம்.
அதனால் தூண்டப்பட்டு, அதை அடிப்படையாய் வைத்து, வேறு சில புத்தகங்களில், செய்திகளில் நான் படித்ததையும் வைத்து, நான் எழுதுவதே இக்கட்டுரை.

இப்போது ஆன்மாக்களிடம் வருவோம்! 
உடலை விட்டு ஆன்மா வெளிவந்ததும் ஆன்மாக்களால் ஒரு வித ரீங்காரச் சத்தத்தை கேட்க முடிகிறது.
மயக்க மருந்து கொடுக்கப்பட்ட சில நோயாளிகள் தங்களுக்கு இது போன்ற சத்தம் கேட்டதாய் சொல்லியிருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு சத்தம் விண்வெளியில் கேட்டதாய் நாஸா வெளியிட்ட ஒளிப்பதிவு நினைவுக்கு வருகிறது. அதன் லிங்க் கீழே

ஆம்ஸ்ட்ராங் முதன்முதலாய் இதைக் கேட்ட போது, இந்த சத்தம் மசூதியில் கேட்கும் பாங்கொலியைப் போல இருப்பதை உணர்ந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதை வதந்தி என்கிறது விக்கிபீடியா.
இந்துக்கள் அதை ‘ஓம்’ ஒலி போல இருக்கிறது என்கிறார்கள்.
எனக்கு ப்ரம்மரீப் பிராணயாமம் செய்யும் போது எழும் சப்தம் போல இருக்கிறது.
ஒரு சமயம் கேட்கும் போது ‘காதல் ஓவியம் பாடும் காவியம்’ பாட்டிற்கு முன் வரும் கிருஸ்தவ தேவாலய கோரஸ் போலவும் கேட்கிறது.

மறுபடியும் ஆன்மாக்களுக்கு வருவோம்!
மரணத்திற்கு தயாராயில்லாத சில ஆன்மாக்கள் மட்டும் உலகத்தில் தன் வேலை இன்னும் முடிவடையவில்லை, என்று எண்ணி வருத்தமடைகின்றன. பொதுவாய் திடீர் விபத்தில் இறந்தவர்கள், இளவயதில் உயிரிழந்தவர்கள் போன்றவர்களின் ஆன்மா இதில் அடங்கும்.
மரணமடைந்த உடன் இவ்வகை ஆன்மாக்கள் பார்ப்பது இவர்களது வழிகாட்டியைத் தான். 
வழிகாட்டிகள் என்பவர்கள் உயர் நிலையிலிருக்கும் பக்குவமடைந்த ஆன்மாக்கள்.
வருத்தத்திலிருக்கும் புதிதாய் ஆன்மாவின் சீற்றங்களை இவ்வழிகாட்டிகளால் புரிந்துக் கொள்ள முடிகிறது.
புதிய ஆன்மாக்களை சமாதானப்படுத்தி அழைத்து வரும் வேலையை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

மற்றபடி பொதுவாய் இவ்வழிகாட்டிகளைப் சிறிது நேரத்திற்குப் பின் தான் பார்க்கின்றன ஆன்மாக்கள்.
உயிர் உடலைப் பிரிந்த சிறிது நேரத்தில், ஆன்மா குறிப்பிட்ட திசையில் உந்தப்பட்டு,  இருண்ட சுரங்கம் போன்ற பாதையில் பயணிக்கத் துவங்குகிறது.
சிலர் இறந்த உடனேயே தங்களுக்கு அந்த சுரங்கப் பாதைத் தெரிவதாகச் சொல்கிறார்கள்.
பலருக்கு சிறிது நேரம் கழித்தே இது புலப்படுகிறது.

இருண்ட சுரங்கப்பாதையைக் கடக்கும் வரைத்  தான் எங்கே செல்கிறோம், எப்படிப் பயணிக்கிறோம் என்ற குழப்பம் ஆன்மாவிற்கு இருக்கிறது.   
Image result for tunnel vision
அந்த சுரங்கப்பாதையின் தூர முடிவில் ஒரு ஒளி தெரிகிறது.
சுரங்கப் பாதையை விட்டு வெளியேறி அவ்வொளியை அடைந்ததும் ஆன்மாவினால் அமைதியை உணர முடிகிறது.
அங்கே தான் தங்கள் விருப்பதிற்குரிய உறவினர்களின், நண்பர்களின் ஆன்மாக்களை, வழிகாட்டிகளை அது சந்திக்கிறது.

                                   -ஆவியுலக பயணம் தொடரும்
(படங்கள் கூகுளிலிருந்து)

    


4 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

யதேச்சையாகக் கிடைத்த புத்தகமாகப் படித்தீர்களா, விருப்பத்தில் தேடிப் பிடித்து படித்தீர்களா? சும்மா தெரிந்து கொள்ள ஆவல்!

எனக்குக் கனவுகள் இது போல வந்ததில்லை என்பது ஏமாற்றம்தான்!

இந்த அனுபவங்களை நானும் படித்திருக்கிறேன். அடுத்தடுத்த பகுதிகளுக்காய்க் காத்திருக்கிறேன்.

ஹேமா (HVL) சொன்னது…

Facebookக்கின் ஒரு குழுவில் இருக்கும் சிலரின் அமானுஷ்ய அனுபவங்களை அலசிக் கொண்டிருந்தோம். நெருங்கிய, பொய் சொல்ல மாட்டார் என்று நிச்சயமாய் நம்பும் ஒருவருக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறது என்பதால் எனக்கு இதில் நம்பிக்கை இருந்தது. அந்த நேரம் அக்குழுவினருள் ஒருவர் எங்களுக்கு 'Laws of the spirit world' புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். அதைப் படித்து பின்னர் நாங்களே (நாங்களும் ஒரு புதிய குழு தொடங்கி விட்டோம்!)தேடிப்பிடித்து படித்தது 'Journey of the souls'.

Truth சொன்னது…

The sound of the sun is only partially true. The original video released by nasa had om sound only for a sec or two. The other videos are all made by people who hyped it more. Nevertheless, be it a second or two, it was om sound that I could figure out.

For for thought : sound waves can't travel in space scientifically. Then how nasa found the sun sound? Google gives the answers. Go explore

Sekar R சொன்னது…

யதேட்சையாக உங்கள் பதிவு இங்கே கூட்டி வந்தது. ஆல்ஃபா ஆர்வம் அதிகம்.தொடர ஆசை
-நளினிசாஸ்திரி