வெள்ளி, 18 மார்ச், 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் - 4
நம்முடையதைப் போல ஆவியுலகிலும் ஏழு உலகங்கள் இருக்கின்றன. (ஆவியண்டம் என்று சொல்ல வேண்டுமோ!) ஒவ்வொரு உலகிலும் பத்து நிலைகள் இருக்கின்றன.

ஒன்றாம் உலகில் இருக்கும் ஆன்மாக்கள் பக்குவப்படாத ஆன்மாக்கள். இந்த உலகம் சுத்தமாய் ஒளியே இல்லாத, பயங்கரமான குளிர் நிலவும் பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. இங்கிருக்கும் ஆன்மாக்கள் ஒன்றையொன்று வெறுப்பவையாக இருக்கின்றன.

இரண்டாம் உலகில் இருப்பவை ஒன்றை விடப் பரவாயில்லை ரகம். இந்த பகுதியும் மோசமான குளிர் கொண்ட இருளான பகுதியே. இங்கிருக்கும் ஆன்மாக்களும் ஒருவரையொருவர் தூற்றிக் கொள்ளும் தன்மை கொண்டவை.

மூன்றாம் உலகில் இருக்கும் ஆன்மாக்கள் இரண்டாவதை  விட சற்றே மேம்பட்டவை. இவ்வுலகம் கீழிருக்கும் இரண்டு உலகங்களை விட பரவாயில்லையே தவிர இதுவும் ஒளியற்ற பகுதி தான்.

முதல் மூன்று உலகில் இருந்து பூவுலகில் பிறப்பெடுத்திருக்கும் ஆன்மாக்களின் உள்ளுணர்வு, தாங்கள் இறந்த பின் எங்கே போகப்போகிறோம் என்பதை அறிந்தே இருக்கும். அதனால் அவை மரணத்தைக் கண்டால் பயப்படும் என்று சொல்லப்படுகிறது.

நான்காம் உலகம் கிட்டத்தட்ட நம் உலகைப் போன்றது. மனித ஆன்மாக்கள் இங்கிருந்து தான் தன் பயணத்தைத் துவங்குகின்றன.

ஐந்தாம் உலகத்தை சொர்கத்தின் நுழைவாயில் என்று சொல்லலாம். இங்கே வானம் சற்றே வெளிச்சம் கொண்டதாக இருக்கிறது. நமது பூவுலகைப் போலவே பல அழகிய இடங்களைக் கொண்டதாக இது இருக்கிறது. இங்கிருக்கும் ஆன்மாக்கள் உதவும் எண்ணம் கொண்டவையாக இருக்கின்றன.

ஆறாம் உலகம் பல வண்ணங்களைக் கொண்ட மிக அழகான ஒரு உலகம். இங்கிருக்கும் ஆன்மாக்கள் கிட்டத்தட்ட பக்குவமடைந்தவை.
மனதிற்குப் பிடித்த வேலைகளைச் செய்து கொண்டு, மற்றவர்களுக்கு உதவியவாறு சந்தோஷமாய் வாழ்பவை. இங்கிருந்து பூவுலகிற்கு வரும் ஆன்மாக்களின் உள்ளுணர்வு அவர்களை கீழ்ச்செயல்களைச் செய்யாமல் தடுத்துவிடுகிறது.

ஏழாம் உலகம் இருப்பதிலேயே உயர்வானது. இதன் அழகு உலகில் இருப்பவர்களால் கற்பனை செய்ய முடியாதது. இந்நிலையை அடைவதற்கு தான் அனைத்து ஆன்மாக்களும் முயற்சி செய்கின்றன.
இதற்குப் பிறகு என்ன இருக்கிறது என்பதை சாதாரண ஆன்மாக்களால் அறிய முடிவதில்லை
.
ஏழாம் உலகில் இருக்கும் ஆன்மாக்கள் மிகவும் பரிசுத்தமானவை. பூவுலகத்தில் பிறப்பெடுக்கும் போது அங்கே சிறு பாவத்தைச் செய்தாலும் ஐந்தாம் அல்லது ஆறாம் உலகிற்கு இறங்கி விடும் வாய்ப்பு இருக்கிறது.

ஆவியுலகத்திலேயே அடுத்த உலகிற்கு முன்னேறும் வழி கிடையாதா என்றால் இருக்கிறது. ஆனால் அது அதிக காலம் எடுக்ககூடியது. பூவுலகில் பிறப்பெடுத்து, அதில் பக்குவப்பட்டுத் திரும்பும் போது, மிக விரைவாக அடுத்த உலகிற்குச் சென்றுவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதற்காகவே பிறப்பைத் தேர்ந்தெடுக்கின்றன ஆன்மாக்கள்.
(நான் படித்ததில் மற்றொரு முக்கியமான புத்தகம் ‘laws of the spirit world’ என்று ஆட்டோ ரைட்டிங் மூலம் எழுதிய புத்தகம். அதிலிருந்தும் பல கருத்துகளை நான் இங்கே கையாண்டிருக்கிறேன்.)


11 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

இதை எல்லாம் எப்படிக் கண்டுபிடித்தார்கள் என்பது புதிர்! கிட்டத்தட்ட இதே போன்ற கருத்துகளை 'ஒரு யோகியின் சுய சரிதம்' புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

ஹேமா (HVL) சொன்னது…

இது auto writing மூலம் (ஆவிகள் நேரடியாய் மீடியத்தின் மூலம் எழுதுவது ) எழுதப்பட்ட புத்தகத்தில் படித்தது. Oujia board போல இதுவும் சாத்தியம் என்று நம்புகிறேன்.

அப்பாதுரை சொன்னது…

ஆவியில் சுத்த ஆவியா?

பெயரில்லா சொன்னது…

இதெல்லாம் புளுகாய் இருக்க வாய்ப்புள்ளதா? சொன்ன கோஷ்டி பார்ப்பானிடம் பாடம் கற்றவனாய் இருந்திருக்கலாம். இந்த புளுகை கந்த புராணத்திலும் கண்டதில்லை என்று சொலவடை உண்டு. கண்டவர் விண்டிலர்....

ஹேமா (HVL) சொன்னது…

பரிசுத்த ஆவியாய் இருக்கலாம்....

ஹேமா (HVL) சொன்னது…

புளுகு என்பதை விட இறக்கும் நேரம் நம் மனம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் மாய பிம்பமோ என்ற சந்தேகம் உண்டு எனக்கு. மற்றபடி ந்நான் படித்த புத்தகத்தை எழுதிய வெள்ளையருக்கும் நம்மவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாய் தோன்றவில்லை, அனானி.

Truth சொன்னது…

Journey of souls want written by auto writing or spiritual writing, but laws of the spirit world was. A correction to the last line

ஹேமா (HVL) சொன்னது…

Corrected. Thanks for pointing it out.

G.M Balasubramaniam சொன்னது…

நானும் ஆவிகள் உலகம் என்னும் பதிவு எழுதி இருக்கிறேன் அதில் கூறப்பட்டவிஷயங்கள் ஓஜா போர்ட் மூலம் ஒருவர் பெற்ற அனுபவத்தைப் பகிர்ந்ததில் இருந்து எழுதியது யார் எது எழுதி இருந்தாலும் இவற்றை உள்ளபடி சொல்லிய படி ஏற்க மனம் மறுக்கிறது முதலில் ஆன்மா என்றால் என்ன என்று தெளிவாகச் சொல்லி இருக்க வேண்டும் சுட்டி இதோ
http://gmbat1649.blogspot.in/2013/12/blog-post_13.html

ஹேமா (HVL) சொன்னது…

நன்றி. படித்து பார்க்கிறேன்.

vino raj சொன்னது…

ம்