செவ்வாய், 5 ஏப்ரல், 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் - 5

சென்ற பதிவில் சொன்ன ஆவியுலகின் பகுதிகள் பற்றிய
நண்பர்களின் சந்தேகங்கள் எனக்கு ஆச்சர்யமளிக்கவில்லை.
சொல்லப் போனால் எனக்குள்ளும் அதைப் பற்றிய ஒரு நம்பிக்கையின்மை இருக்கவே செய்கிறது.
அது என் எழுத்தில் தெறித்திருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
இருந்தும் அப்பகுதியைப் பற்றியும் பேசிவிட வேண்டும் என்ற நோக்கத்திலே எழுதியது தான் அது.
இதைப் படிக்கும் மற்றவர்களுக்கும் இந்த கேள்விகள் எழலாம்!
அதனால் ஆவியுலகம் பற்றிய கேள்விகளையும்,
அதற்கு பதிலாக அதைப் பற்றிய என் கருத்தையும் இங்கே பதிகிறேன்.

முதல் கேள்வி:
ஆவியுலகத்தைப் பற்றி எப்படி கண்டுபிடித்தார்கள்?

ஆவியுலகைப் பற்றி நான் பேசும் கருத்துகள், auto writing மூலம் (ஆவிகள் நேரடியாய் மீடியத்தின் மூலம் எழுதுவது ) எழுதப்பட்ட புத்தகத்தில் (Laws of the spirit world) படித்தது. Oujia board போல auto writingம் சாத்தியம் என்று நம்புகிறேன்.
(இதைப் பற்றி ஆர்.கே நாராயணன் தன் ‘The English teacher’ நாவலில் எழுதியிருக்கிறார். அது அவருடைய அனுபவம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.)
இரண்டாம் கேள்வி:
இதெல்லாம் புளுகாய் இருக்க வாய்ப்புள்ளதா?
புளுகு என்பதை விட, இறக்கும் நேரம் நம் மனம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் மாய பிம்பமோ என்ற சந்தேகம் உண்டு எனக்கு.
இருந்தும் எனக்கு, வாழ்க்கையை இந்த உலகத்திலேயே முடித்துக் கொள்ள விருப்பமில்லை. 
நேசிப்பவர்களோடு என்றென்றும் தொடர்பிலிருக்கவே விரும்புகிறேன்.
கேட்டவர்களுக்கு நன்றி!
சரி! இனி ஆவியுலகைப் பற்றி….
நம் ஆன்மாவின் குறிக்கோள் கடந்த பதிவில் சொன்ன ஏழாம் உலகை அடைவதாக இருக்கிறது.
அதற்கு ஆன்மா பல்வேறு விதங்களில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
அந்த பக்குவத்தைப் பெறுவதற்காக ஆன்மா பூவுலகில் பிறப்பெடுத்து நிறைய அனுபவங்களைப் பெறுகிறது.
ஆவியுலகிலிருந்தபடியே ஆன்மாவால் ஏழாம் உலகிற்கு முன்னேற முடியாதா என்று கேட்டால் முடியும் என்று தான் சொல்கிறது, laws of the spirit world.
ஆனால் அதற்கு மிக நீண்ட காலம் எடுக்கிறது.
பூலோகத்திற்கு பிறப்பெடுத்து வந்தோம் என்றால் மிகக் குறுகிய காலத்தில் அவ்வுலகை அடைய முடியும்.
இதற்குக் காரணம் இந்த பூவுலகம் நன்மை மற்றும் தீமைகளின் கலவையாக இருப்பது, மற்றும்
இங்கே வழுக்கி கீழே செல்லக் கூடிய வாய்ப்புகள் அதிகம்.
அதையும் தாண்டி பக்குவப்படும் ஒரு ஆன்மா சுலபமாய் அடுத்த நிலைக்குச் சென்று விடுகிறது.

இதிலிருக்கும் சுவாரஸ்யம் என்னவென்றால்,
தான் எங்கே, எப்படி பிறக்க வேண்டும் என்பதை  நம் ஆன்மா தான் முடிவு செய்கிறது.
இவ்வுலக மொழியில் சொல்வதென்றால், ஒரு குழந்தை தான், தன் தாயை, குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கிறது.
இன்னும் சற்று உள்ளே சென்று இதைப் பார்ப்போம்.
ஆவியுலகில் ஆன்மாக்கள் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருக்கின்றன.
ஒவ்வொரு ஆன்மாக் குழுவும் தங்களுக்கென்று ஒரு பொதுத் தன்மையைக் கொண்டிருக்கிறது. அதாவது ஒத்த ரசனைகளை, இயல்புகளை அவை பெற்றிருப்பதாய் சொல்லலாம்.
ஒவ்வொரு குழுவிற்கும், சற்று மேல்நிலையில் இருக்கும் ஆன்மா ஒன்று தலைமை பொறுப்பேற்றுக் கொள்கிறது, டீம் லீடரைப் போல.

பூவுலகில் பிறப்பெடுப்பதற்கு முன்,
ஒரு ஆன்மா தான் எவ்வெவ்வகைகளில் முன்னேற வேண்டும் என்பதை தலைமை ஆன்மாவுடன் ஆராய்கிறது.
அவ்வான்மாவிற்கு முன்னால், பூவுலகில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சில குடும்பங்களின் சூழல்கள் முன்வைக்கப் படுகின்றன.
அக்குடும்பத்தில் பிறந்தால் அவ்வான்மா  ஏற்கக் கூடிய சவால்களும் அதற்கு உணர்த்தப் படுகிறது.
சீக்கிரம் மேலே சென்று விட வேண்டும் என்ற ஆர்வக் கோளாரில், அதிக சவால்களை தேர்ந்தெடுக்கும் ஆன்மாக்களுடன் தலைமை ஆன்மா கலந்தாலோசிக்கிறது (like counselling).
சில சவால்களை அதனால் தாங்க முடியாமல் போய், அதன் காரணமாக தம் குறிக்கோளிலிருந்து தவறி, கீழ் நிலைக்குச் செல்லக் கூடிய சாத்தயம் இருப்பது உணர்த்தப் படுகிறது.
எவ்வளவு ஆலோசித்தாலும், கடைசியில்,
தான் ஏற்கப் போகும் பொறுப்புகளை, அதனால் ஏற்படப் போகும் சிரமங்களை, தன் குடும்பத்தை, தன் தாயைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அந்த ஆன்மாவிற்கு மட்டுமே இருக்கிறது.
சற்றே யோசித்துப் பாருங்கள்!
இந்த சிரமத்தை ஏற்றுக் கொண்டால் நீ மேல் நிலைக்கு செல்லும் வாய்ப்பு இருக்கிறது
என்று நமக்கு சொல்லப் பட்டிருந்தால்,
நாம் நம்முடைய இவ்வாழ்க்கைச் சிரமங்களைத் தேர்ந்தெடுத்திருப்போம் தானே! நீங்கள் எப்படியோ, நான் நிச்சயம் தேர்ந்தெடுத்திருப்பேன்.
அதனால்,
நமக்கு இப்போது ஏற்படும் சிரமங்களுக்கு, சிக்கல்களுக்கு, காரணம் நாம் தான், நம்முடைய தேர்ந்தெடுப்பு தான்.
இந்த எண்ணம் வாழ்க்கையின்  சிரமங்களைச் சுலபமாய் ஏற்றுக் கொள்ளும் மனநிலையைத் தருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
இப்படி எண்ணும் போது வரும் சிரமங்களைக் கண்டு நமக்கு உற்சாகம் ஏற்படுகிறது.
இந்த உற்சாகம் அச்சிரமத்தை எளிதாய் கடந்து போக உதவி செய்கிறது.
இன்னொன்று,
நம் குழந்தை, நாம் தான் வேண்டும் என்று நம்மைத் தாயாய், தந்தையாய், தேர்ந்தெடுத்துப் பிறந்திருக்கிறது.
நம்முடைய பெற்றோரும் நம்முடைய தேர்ந்தெடுப்பே!
நம்முடன் கழியும் அவர்களுடைய பொழுதுகளை,
இனிமையானதாய் ஆக்குவது நம் கடமை தானே!
இதை புரிந்துக் கொண்டோமானால்,
அவர்கள் மேலிருக்கும் பாசம் அதிகரிப்பதை உணரலாம்.
இதை ஏற்றுக் கொள்ளும் போது
நம் உறவுகளின் நடத்தையை சுலபமாய் மன்னிக்க முடிகிறது.
இது தானே வாழ்க்கை…
ஆவியுலகப் பயணம் தொடரும் . . .


17 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

ஆன்மாக்கள் தங்கள் பிறக்கப் போகும் குடும்பத்தைத் தேர்ந்தெடுக்கின்றன என்பதை மனம் ஏற்க மறுக்கிறது!! சவால்கள், குறுக்கு வழி, கீழ்நிலை ஆகியவற்றைப் பற்றிப் படிக்கும்போது யாரையோ பற்றி படிப்பது போல ஒரு மூன்றாம் நிலை உணர்வு தோன்றுகிறது! ஆனால் நீங்கள் சொல்லி இருப்பதைப் போல உறவுகளை நேசிக்க இந்த மனோபாவம் / எண்ணம் உதவலாம்!

ஹேமா (HVL) சொன்னது…

என் ouija boardன் காய் நகர்ந்திருக்கா விட்டால், எனக்கும் அப்படி தோன்றியிருக்கக் கூடும்.
அல்லது அது என் எழுத்தின் தன்மையாலும் இருக்கலாம்.

அப்பாதுரை சொன்னது…

tibetan book of the dead படித்திருக்கிறீர்களா?

ஹேமா (HVL) சொன்னது…

இதுவரை இல்லை! லைப்ரரியில் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன். படிக்கிறேன்....

ஹேமா (HVL) சொன்னது…

யார் எழுதிய புத்தகம்?

வல்லிசிம்ஹன் சொன்னது…

நான் நம்புகிறேன். எனக்கு ஆட்டோ எழுதும் முறையினால்
என்னைவிட்டுச் சென்ற பெற்றோர்,தம்பி,கணவர் அனைவரிடமும் எழுத முடிந்திருக்கிறது.

ஹேமா (HVL) சொன்னது…

Wow,amazing! Will learn more from you thro fb

அப்பாதுரை சொன்னது…

எழுதியது யார் என்று நினைவில்லை. பிரபலமான புத்தகம். தேடினால் நிச்சயம் கிடைக்கும்.

'நெல்லைத் தமிழன் சொன்னது…

இன்னைக்குத்தான் இந்த பிளாக்கைப் பார்க்கிறேன். அமானுஷ்யத்தின் பின்னூட்டம் மூலமாக வந்தேன். இந்தத் தொடரை (5) முழுமையாப் படித்து பின்னூட்டம் இடுகிறேன். நான் ஆவியெலகம் சம்பந்தமாக ஆங்கிலப் புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ளது familiarஆத் தெரிகிறது. நான் ஆவியுலகம் போன்ற பத்திரிகைகளையும் அவ்வப்போது படிப்பேன்.

'நெல்லைத் தமிழன் சொன்னது…

இன்னைக்குத்தான் இந்த பிளாக்கைப் பார்க்கிறேன். அமானுஷ்யத்தின் பின்னூட்டம் மூலமாக வந்தேன். இந்தத் தொடரை (5) முழுமையாப் படித்து பின்னூட்டம் இடுகிறேன். நான் ஆவியெலகம் சம்பந்தமாக ஆங்கிலப் புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ளது familiarஆத் தெரிகிறது. நான் ஆவியுலகம் போன்ற பத்திரிகைகளையும் அவ்வப்போது படிப்பேன்.

'நெல்லைத் தமிழன் சொன்னது…

இன்னைக்குத்தான் இந்த பிளாக்கைப் பார்க்கிறேன். அமானுஷ்யத்தின் பின்னூட்டம் மூலமாக வந்தேன். இந்தத் தொடரை (5) முழுமையாப் படித்து பின்னூட்டம் இடுகிறேன். நான் ஆவியெலகம் சம்பந்தமாக ஆங்கிலப் புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனால் நீங்கள் எழுதியுள்ளது familiarஆத் தெரிகிறது. நான் ஆவியுலகம் போன்ற பத்திரிகைகளையும் அவ்வப்போது படிப்பேன்.

'நெல்லைத் தமிழன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
ஹேமா (HVL) சொன்னது…

ஆமாம் நெல்லைத் தமிழன், நம் ஆதி கதைகள் இவ்விஷயங்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. நம் முன்னோர்கள் இவற்றைப் பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள்.

R.Someswaran சொன்னது…

வணக்கம் தங்களின் தொடர் மிகவும் அருமை. இந்த ஐந்தாவது தொடர் படித்த உடனே நினைவுக்கு வந்தது அனிதா மூர்ஜானி அவர்களின் "Dying to Be Me" புத்தகம்தான்.

சரி அனைத்து பதிவுகளையும் படிக்கலாம் என்று முதல் பதிவு சென்றால் அந்த புத்தகத்தில் இருந்துதான் ஆரம்பித்திருந்தீர்கள் மகிழ்ச்சி.

பிறப்பை நாம் தான் தேர்ந்தெடுத்தோமோ என்று சில சமயம் தோன்றியதுண்டு அதையே அனிதா மூர்ஜானி அவர்கள் Facebookல் கூறியிருந்தார்.

R.Someswaran சொன்னது…

வணக்கம் தங்களின் தொடர் மிகவும் அருமை. இந்த ஐந்தாவது தொடர் படித்த உடனே நினைவுக்கு வந்தது அனிதா மூர்ஜானி அவர்களின் "Dying to Be Me" புத்தகம்தான்.

சரி அனைத்து பதிவுகளையும் படிக்கலாம் என்று முதல் பதிவு சென்றால் அந்த புத்தகத்தில் இருந்துதான் ஆரம்பித்திருந்தீர்கள் மகிழ்ச்சி.

பிறப்பை நாம் தான் தேர்ந்தெடுத்தோமோ என்று சில சமயம் தோன்றியதுண்டு அதையே அனிதா மூர்ஜானி அவர்கள் Facebookல் கூறியிருந்தார்.

R.Someswaran சொன்னது…

அனிதா மூர்ஜானி அவர்கள் சொல்லும் தத்துவங்கள் ரமண மஹரிஷி கூறியதற்க்கு ஒப்பானது போல் தோன்றுகிறது.

திரு சுகி சிவம் ஒருமுறை இவ்வாறு குறிப்பிடுகிறார், "நல்லது செய்து இறந்து வலம் வரும் நல்ல கர்மா கொண்ட ஆன்மாக்கள் (தேவர்கள்), தீயது செய்து இறந்து வலம் வரும் தீய கர்மா கொண்ட ஆன்மாக்கள் (அசுரர்கள்) தங்களின் கர்மாவுக்கு ஏற்ற நிலையில் உள்ள மனிதர்களை புது பிறவியில் தங்களின் பெற்றோராக தேர்ந்தெடுக்கிறார்கள். இதற்க்கு பல நாட்கள் முதல் பல வருடங்கள் வரை ஆகும்."

R.Someswaran சொன்னது…

"Many Lives, Many Masters: The True Story of a Prominent Psychiatrist, His Young Patient, and the Past Life Therapy That Changed Both Their Lives by Brian L. Weiss" என்ற புத்தகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையென்றால் படித்துப்பாருங்கள்.

"http://www.rphari.com/ebook.asp" இந்த வலை தளத்தில் சில E-Books உள்ளன அவற்றையும் வாசித்து பாருங்கள். உங்களின் தேடலுக்கு சில பதில்கள் கிடைக்கலாம்.