வெள்ளி, 2 டிசம்பர், 2016

அவ்வுலகமும் ஆன்மாக்களும் - 6


     Image result for white light soul  
ஆன்மா இருண்ட சுரங்கப் பாதையிலிருந்து வெளியேறியதும் இருக்கும் அவ்வெளி, வெள்ளையின் பல ஷேடுகளில் நெய்யப்பட்ட ஒளி அடுக்குகளைப் போலக் காட்சியளிக்கிறது . 

அது உள்ளிருந்து விளிப்புறமாக விரியும் ஒரு கண்ணாடி கோளத்தைப் போல இருக்கிறது. அதாவது ஆன்மா பயணிக்கும் பகுதி ஏற்கனவே அது இருந்த பகுதியை விட விரிவானதாய் இருக்கிறது.   

இதில் பயணிக்கும் போது, ஆன்மா தான் சரியான திசையில் இழுக்கபடுவதாய் உணர்கிறது. 
அந்நேரம் tuning forkகின் resonance போல அல்லது wind chimes ஒலி போன்ற இதம் தரும் ஒலியை ஆன்மாவால் உணர முடிகிறது. 
இதை அவ்வுலகமும் ஆன்மாக்களும் 3ம் அத்தியாயத்தில் சொன்ன ஓம்காரத்துடனும் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்.

Michael newton மனிதன் A வை ஹிப்னாடிஸத்திற்கு உட்படுத்தியதில் அவர் அளித்த பதில்களிலிருந்து:

சுரங்கத்தை விட்டு வெளியேறிய மனிதர் Aவின் ஆன்மா முதலில் அப்பரந்த வெளியைப் பார்த்து வியந்து போகிறது. அவ்வெளி ஒரு ப்ரம்மாண்ட ஐஸ் மாளிகை போல இருப்பதாய் உணர்கிறது. Image result for dream
இவ்விடத்தில் ஒன்றைச் சொல்ல வேண்டும். சிலருக்கு நெய்யப்பட்ட ஒளிக்கற்றை அடுக்குகளாய்த் தோன்றும் இவ்வெளி, இவ்வான்மாவிற்கு ஐஸ்மாளிகையாய் தோன்றியிருக்கிறது. வேறு சில ஆன்மாக்கள் காட்டுப் பூக்களை, பூங்காக்களை, கடற்கரைகளை, கட்டிடங்களை, அழகான அறைகளையெல்லாம் இங்கே பார்த்ததாகச் சொல்லியிருக்கின்றன. 

ஹிப்னாடிஸம் இத்தகைய பிரமைக் காட்சிகளை உண்டாக்குகிறதா என்றால், இல்லை என்கிறார் திரு Michael Newton. 
ஆன்மாக்கள் பூவுலகில் தாங்கள் விரும்பிய, பழகிய இடங்களைக் அங்கே காண்பதற்கு காரணம் இருப்பதாய் நம்புகிறார் அவர். 
ஆன்மாவிற்குப் பழக்கப் பட்ட காட்சியை terrestrial mirageகளாய் அதன் முன் உருவாக்கி, அதற்கு ஒரு Familiar உணர்வை ஏற்டுத்தி ஆறுதல் படுத்துகிறது அங்கிருக்கும் சக்தி என்கிறார் அவர்

நம்முடைய பூவுலக நினைவுகள் நமக்கு என்றும் மறப்பதில்லை. 

முதலில் தோன்றும் இவ்வேறுபட்ட காட்சிகள், ஆன்மாக்கள் மேலே செல்லச் செல்லக் குறைந்து, பின்னர் அவற்றின் அனுபவங்கள் ஒன்றைப் போல இருக்கின்றன.

Image result for soul
மனிதன் A வின் ஆன்மா அதற்கு மேல் முன்னேறத் தயங்குகிறது. பூமியில் அவர் விட்டு வந்த மனைவி மக்களின் நினைவு அவரைப் பின்னுக்கு இழுக்கிறது. அந்நேரம் அவரது வழிகாட்டி அவரை நோக்கி வருவதை அவரால் உணர முடிகிறது. அதனிடம் தன்னைப் பாதியிலே இழுத்து வந்ததற்கான காரணத்தைக் கேட்டு கத்துகிறார் அவர். 

ஒரு ஆன்மா உலகில் முடிக்க வேண்டிய வேலை இன்னும் இருந்தால், அது முதன்முதலில் சந்திப்பது தன் வழிகாட்டியைத் தான். அவ்வழிகாட்டிகள் ஆன்மாக்களின் கோபத்தை எதிர் கொள்ள தயாராய் வருகிறார்கள்.

மனிதர் Aவின் வழிகாட்டி, அவர் உலகில் தன் காரியங்களைச் சிறப்பாகச் செய்தார் என்று சொல்லி அவரது ஆன்மாவைச் சாந்தப் படுத்த முயல்கிறது. 

பின்னர் பூமியின் காலத்தை முன்னோக்கி நகர்த்தி, பிற்காலத்தில் அவரது மனைவியும் பிள்ளைகளும் மனிதர் A இறந்ததை ஏற்றுக் கொண்டு தங்கள் வாழ்வில் முன்னேறுவதைக் காட்டுகிறது. 

இதனால் சமாதானமடைந்த மனிதர் A வின் ஆன்மா ஆவியுலகத்திற்குச் செல்லத் தயாராகிறது.

மனிதர் Aவின் ஆன்மாவிற்குச் செய்தது போல எல்லா வழிகாட்டிகளும் ஆவியுலக நுழைவாயிலிலேயே ஆன்மாக்களைச் சாந்தப் படுத்த முயல்வதில்லை.  அதற்கென்று தனிப்பட்ட இடங்கள் இருக்கின்றன. 

அதே போல எல்லா ஆன்மாக்களும் இவ்வளவு எளிதில் சமாதானமடைவதில்லை. ஆன்மாக்கள் தங்கள் துயரங்களை சுமக்கும் நேரம், அவர்களின் பூவுலக அனுபவங்களையும், இறந்த சூழ்நிலையையும் பொறுத்து மாறுபடுகிறது.

தொடரும் ....





7 கருத்துகள்:

ஸ்ரீராம். சொன்னது…

நம்பியும், நம்பாமலும் தொடர்கிறேன்!

தி.தமிழ் இளங்கோ சொன்னது…

இந்த பதிவையும், நான் படிக்காமல் விட்டுப்போன இதன் பழைய தொடர்களையும் இன்றுதான் படித்து முடித்தேன். சுவாரஸ்யமாய் செல்கிறது. எனக்குள் பல சந்தேகம். இருப்பினும் பலரும் அதே சந்தேகங்களைத்தான் பின்னூட்டத்தில் கேட்டுள்ளனர். தொடர்கின்றேன்.

'நெல்லைத் தமிழன் சொன்னது…

ஆன்மாவின் quality அதற்கேற்ற நிகழ்வுகளை உடலைவிட்டுப் பிரிந்தபின் அதற்கு அளிக்கிறது. நான் "சூழ்விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின"வை relate செய்கிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமை. உணர்ந்தேன். தொடருங்கள்.

ஏகாந்தன் Aekaanthan ! சொன்னது…

நன்றாகச் செல்கிறது. மேலும் தெரிந்துகொள்ள ஆவலாகிறேன்

ஹேமா (HVL) சொன்னது…

நன்றி ஸ்ரீராம்,தமிழ் இளங்கோ, நெல்லை தமிழன், தேனம்மை லஷ்மணன்,ஏகாந்தன். உங்கள் பின்னூட்டங்கள் எழுதும் ஊக்கத்தைக் கொடுக்கின்றன.

மாதேவி சொன்னது…

தொடர்கிறேன்.