புதன், 12 ஜூலை, 2017

திருநங்கைகளின் ஆன்மா

Image result for third sex modern art
ஒரு ஆன்மா திருநங்கையாகப் பிறப்பெடுக்கக் காரணம் என்னவாக இருக்க முடியும்?

பொதுவாய் பாலினம் மாறி மாறி பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் பல இருக்கின்றன. அதற்கு மாறாக, குறிப்பிட்ட சில வகைகளில் மட்டுமே பிறப்பெடுக்கும் ஆன்மாக்களும் இருக்கின்றன. 
அதில் ஒரு வகை,  இதற்கு முந்தைய  பிறவிகளில் ஆண்களாக மட்டுமே பிறப்பெடுத்த ஆன்மாக்கள். மற்றொரு வகை அடுத்தடுத்து பெண்களாகவே பிறப்பெடுத்தவை.  

இதில் திருநங்கைகள் எப்படி பிறப்பெடுக்கிறார்கள் என்பதற்கு  Ryuho Okawa இப்படிச் சொல்கிறார்.
முந்தைய பிறவிகளில் தொடர்ச்சியாகப் பெண்களாகவே (அல்லது ஆண்களாகவே) பிறப்பெடுத்தவர்கள், இந்தப் பிறவியில் ஆணாக (அல்லது பெண்ணாக) மாற்றி பிறப்பெடுத்ததில் திகைப்பிற்கு உள்ளாகிறார்கள். 

தற்போதைய பிறப்பிற்கான திட்டம் தீட்டப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பிழையாக (mistakes made while current reincarnation was still in planning stage) இதைச் சொல்கிறார் அவர்.

உதாரணமாக,  
முந்தைய பிறவிகளில் பெண்ணாக மட்டுமே பிறப்பெடுத்துப் பழகிய ஒரு ஆன்மா, இந்த பிறவியிலும் பெண்ணாகப் பிறக்க  முடிவெடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
தன் பெற்றோர்கள் நிச்சயம் இவர்கள் தான் என்று ஒரு தம்பதியைத் தீர்மானித்துக் கொள்கிறது என்றும் வைத்துக் கொள்வோம்.. 
(இது planning stage for current reincarnationல்)

அதே நேரம், அந்த பெற்றோர்களுக்கு ஒரே ஒரு குழந்தை தான், அதுவும் ஆண் குழந்தை என்று முன்பே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக பெண்ணாகப் பிறப்பெடுக்க முடிவு செய்த ஆன்மா, ஆணாக பிறக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது.
வளரும் நேரம், பெண் தன்மை கொண்ட தான் ஆணாகப் பிறந்ததில் குழம்பிப் போகிறது. 

அதனால் அந்தச் சூழலை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இந்த பெண்ணுடல் என்னுடையது அல்ல என்று முடிவு செய்து கொள்கிறது. தன்னை மூன்றாம் பாலினம் என்று வகைப்படுத்திக் கொள்கிறது.

இந்த ஆன்மா தன் பிறப்பைச் சரியாகத் திட்டமிடவில்லை என்று கொள்ளலாம்.

மூன்றாம் பாலினர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான்.

எந்தப் பாலினமாக இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை அந்த நபருக்கு மட்டுமே உண்டு. 
அதனால் அவர்கள் சமூகம் பற்றிய கவலைகளை விடுத்து, தான் கற்றுக் கொள்ள  வேண்டிய விஷயங்களில், தன் ஆன்மாவை மேம்படுத்தக் கூடிய விஷயங்களில் மட்டுமே கவனம் செலுந்த வேண்டும். 
(நன்றி, Heal yourself, Ryuho Okawa புத்தகம்)

9 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

முடிவாக சொன்னது முத்தாய்ப்பு...

நெல்லைத் தமிழன் சொன்னது…

"எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை அந்த நபருக்கு மட்டுமே உண்டு." - அந்த ஆன்மா, தன் நிலையை அறிந்து, இன்ன செய்யவேண்டும் என்ற மெச்சூரிட்டி வருவதற்குப் பல வருடங்கள் ஆகிவிடுமே (10 வயதிலிருந்து இந்தத் திடுக்கிடல் ஆரம்பித்து, மற்றவர்களால் தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு, சுற்றியிருப்பவர்களால் அவமதிக்கப்பட்டு/வெறுக்கப்பட்டு, அந்தச் சூழ்'நிலையைவிட்டு ஓடி, வழி தவறி, பிறகு நல்ல நபரிடம் அடைக்கலம் பெறும்வரை, அது என்ன செய்யும்? சமூகம்தான் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களிடம் பரிவு காட்டவேண்டும் (இந்தத் திடுக்கிடும் காலத்தைச் சுமூகமாகக் கடப்பதற்கு)

Geetha Sambasivam சொன்னது…

ஆன்மாவுக்கு இந்த முன் ஜென்ம நினைவுகள் எல்லாம் இருக்குமா? அப்படி இருந்தால் அது தான் போன பிறவியில் பெண்! இந்தப் பிறவியில் இந்தப் பெற்றோருக்கு ஆணாகப் பிறந்தாக வேண்டும் என்று புரிந்து கொள்ளாதா? பெற்றோருக்கு ஆண் குழந்தை தான் பிறக்க வேண்டும் என தீர்மானம் ஏற்கெனவே ஆன பின்னர் அதற்கேற்ப ஆன்மா தன்னை மாற்றிக் கொள்ளாதா? மாற்றிக்கொள்ள இயலாதா?

இது ஆன்மா தீர்மானிப்பதெல்லாம் இல்லை என்றே தோன்றுகிறது.

ஸ்ரீராம். சொன்னது…

இந்த விளக்கங்களை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருக்க மாட்டார்கள் இப்படி பிறப்பெடுத்தவர்கள்!

Geetha Sambasivam சொன்னது…

இது ஆன்மாவால் போடப்படும் திட்டம் அல்ல என்பதே என் கருத்து! அதைச் சொல்ல வந்து கடைசியில் சரியாகச் சொல்லத்தெரியவில்லை. :) இது இப்படித் தான் என்பது ஏற்கெனவே இறைவனால் தீட்டப்பட்ட திட்டம்!

நெல்லைத் தமிழன் சொன்னது…

@கீதா சாம்பசிவம் - இங்கதான் இன்னொரு இடுகைல, ஆள் போனப்பறம், அந்த ஆத்மாவை வழிகாட்டி ஆவிகள் வழி நடத்தும், சமயம் வாய்க்கும்போது (அதற்குரிய தருணம் வரும்போது), சில பல ஆப்ஷன்ஸ் காட்டி, அதில் எந்த மாதிரியான இடத்தில் பிறக்க விருப்பம் என்று கேட்டு, அப்புறம் அந்த வீட்டில் பிறக்க அனுப்பிவிடும் என்று படித்திருக்கிறோமே. அந்தத் தொடர்ச்சியிலதான் இதையும் படிக்கணும். இதைப் பற்றி இன்னும் எழுதலாம். இறைவன் திட்டம், Executed by Leaders etc. என்று. சரி.. எதுக்கு வம்பு..

ஹேமா (HVL) சொன்னது…

கருத்துகளுக்கு மிக்க நன்றி, நெல்லைத் தமிழன், திண்டுகல் தனபாலன், ஶ்ரீ ராம், கீதா சாம்பசிவம்.
நெல்லைத் தமிழன் சொன்னது சரி தான். ஆனால் நான் படித்த புத்தகங்களில் எங்குமே கடவுள் என்று குறிப்பிடப்படவில்லை. மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள ஆன்மா என்றே சொல்லப்படுகிறது. அந்த ஆன்மாவின் மேற்பார்வையில் நாம் தீர்மானிக்கும் பாதையே நம் வாழ்க்கை.
இன்னும் விரிவாக இந்த லிங்கில்
http://riviyah.blogspot.sg/2016/04/

Geetha Sambasivam சொன்னது…

http://packirisamy.blogspot.com/2013/03/

இந்தப் பதிவரும் கிட்டத்தட்ட உங்கள் அனுபவங்களைப் போலவே சொல்லி இருக்கிறார். ஒரு ஆங்கிலப் புத்தகத்தை மொழி பெயர்த்துள்ளார். ஆன்மாக்களைப் பற்றியது. ஆனால் உங்கள் பதிவு திருநங்கைகளின் ஆன்மா குறித்து. இது பொதுவானது.

ஹேமா (HVL) சொன்னது…

படிக்கிறேன்.
மிக்க நன்றி!